/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனைவரும் ஓட்டுப்போட விழிப்புணர்வு முகாம்
/
அனைவரும் ஓட்டுப்போட விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 28, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி : தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி, பனமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
வீரபாண்டி சட்டசபை தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில் மாணவியர், '100 சதவீதம் ஓட்டுப்போடுவோம்' என, உறுதிமொழி ஏற்றனர். சந்தைப்பேட்டையில் தேர்தல் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கையெழுத்திட்டனர். வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி பங்கேற்றார்.