/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்துறையின் விழிப்புணர்வு போட்டி தீரஜ்லால் காந்தி கல்லுாரி சாதனை
/
வனத்துறையின் விழிப்புணர்வு போட்டி தீரஜ்லால் காந்தி கல்லுாரி சாதனை
வனத்துறையின் விழிப்புணர்வு போட்டி தீரஜ்லால் காந்தி கல்லுாரி சாதனை
வனத்துறையின் விழிப்புணர்வு போட்டி தீரஜ்லால் காந்தி கல்லுாரி சாதனை
ADDED : ஜூன் 08, 2024 02:47 AM
சேலம்: வனத்துறை சார்பில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில், தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சேலம் வனக்கோட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இதில் தீரஜ்லால் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் பரிசு பெற்றனர். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்கான சவால்கள், காட்டுத்தீ தடுப்பு முன்னெச்சரிக்கை, மனித, விலங்கு மோதலை தடுக்கும் வழி முறைகள் குறித்து நடந்த போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகள் ரம்யா, மேகலா, லோகேஷ், செந்தில்
குமரன், ஜனா, ஹரிபாலா, தாரணி, பரணிதரன் ஆகியோருக்கு கல்லுாரி செயலாளர் அர்ச்சனா மனோஜ்குமார், கல்லுாரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் மற்றும் ேஹக்கத்தான் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பராட்டுகளை தெரிவித்தனர்.