ADDED : செப் 30, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டியில் உள்ள அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில், பள்ளி மாணவர்களுக்கு 'தொன்மையை அறிவோம் பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதநாயக்கன்பட்டி காமராஜர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விஜயகுமார், அன்பரசி ஆகியோர் பங்கேற்று, ஒரு நாட்டின் பண்பாடு, நாகரீகம், கலாசாரம், பொருளாதாரம் பற்றி அறிய பண்டைய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில் கட்டடக்கலை, சிற்பக் கலை, கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், நடுகற்கள், ஒலைச்சுவடிகள் புராதன சின்னங்களாக உள்ளன. இவைகள் வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணங்களாக திகழ்கின்றன என எடுத்துரைத்தனர்.