/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உணவு வீணாவதை தடுக்க விழிப்புணர்வு மாரத்தான்
/
உணவு வீணாவதை தடுக்க விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : பிப் 10, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பிள்ளை: உணவு வீணாவதை தடுக்கக்கோரி, இளம்பிள்ளை ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, 'நம்பி ஓடு 3.0' தலைப்பில் நேற்று நடந்தது. பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து, 2, 3, 5, 10 கி.மீ., போட்டிகள் நடத்தப்பட்டன.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என, அனைவரும் ஆர்வத்துடன் ஓடினர். அனைவருக்கும் டி சர்ட், தொப்பி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 4 பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, 75,000 ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

