ADDED : செப் 22, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம், சங்ககிரி அரசு மருத்துவமனை சார்பில், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. சங்ககிரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணகுமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வி.என்.பாளையத்தில் தொடங்கிய ஊர்வலம், பவானி பிரதான சாலை வழியே சென்று திருச்செங்கோடு பிரிவு சாலையில் நிறைவடைந்தது.தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், மகளிர் கல்லுாரி மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். முன்னதாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. சங்ககிரி நம்பிக்கை மைய பணியாளர்கள், சேலம் மாவட்ட பொது தொண்டு நிறுவன திட்ட மேலாளர்கள், மேற்பார்வையாளர், களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.