/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலப்பட உணவை கண்டறிய மாணவியருக்கு விழிப்புணர்வு
/
கலப்பட உணவை கண்டறிய மாணவியருக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 21, 2025 07:25 AM
பள்ளிப்பாளையம்: உணவு பொருட்களில் உள்ள கலப்படத்தை, எளிய முறையில் கண்டுபிடிப்பது குறித்து, உணவு பாதுகாப்பு துறையினர், பள்ளிப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி மண்டபத்தில், நேற்று சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் ஆகியோர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி, பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தனியார் நிறுவனத்தை சேர்ந்த நாகலட்சுமி, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டார்.
சாலையோர வியாபாரிகள் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. சில்லி வகைகளுக்கு செயற்கை வண்ணம் சேர்க்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து, ஆவாரங்காடு பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உணவு பொருட்களில் உள்ள கலப்படத்தை, எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிப்பது குறித்து பரிசோதனை முறைகளை, உணவு பாதுகாப்பு துறையினர் மாணவியருக்கு செய்து காட்டினர்.