/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
எஸ்.ஐ.ஆர்., குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
எஸ்.ஐ.ஆர்., குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 14, 2025 01:46 AM
ஆத்துார், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.,) குறித்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ., தமிழ்மணி தொடங்கி வைத்தார். அதில் ஆத்துார் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம், மக்கள், தன்னார்வ அமைப்பினர், வாகனங்களில் உடையார்
பாளையம், 4 ரோடு வரை சென்று, மீண்டும் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அப்போது, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்த பலகையில், கையெழுத்துகளை பதிவிட்டனர். இதில் ஆத்துார் தாசில்தார் பாலாஜி, வருவாய்த்துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.