/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,
ADDED : நவ 14, 2025 01:44 AM
இடைப்பாடி, இடைப்பாடி, நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள மக்களிடம் மனுக்களை பெற, கோனேரிப்பட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. அதில், துறை வாரியாக மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, ஆய்வு செய்தார். அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்ட மனுக்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விதைப்பொருட்களை, எம்.பி., செல்வகணபதி வழங்கினார். தாசில்தார் வைத்தியலிங்கம், தி.மு.க., - தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், இடைப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நல்லதம்பி, ஒன்றிய பொருளாளர் தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.