/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐயப்ப ஆசிரம கும்பாபிஷேகம் கோலாகலம்
/
ஐயப்ப ஆசிரம கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மார் 17, 2024 02:08 PM
சேலம்: சேலம், குரங்குச்சாவடி சாஸ்தா நகரில் உள்ள ஐயப்ப ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, சாஸ்தா நகர் மனைநில சொந்தக்காரர்கள் சங்கம் சார்பில், ஜாகீர் அம்மாபாளையம் புதுக்கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து ஐயப்பன் பிரதிஷ்டா பூஜை நடந்தது. காலை, 10:30 முதல், 11:30 மணிக்குள் ஐயப்ப சுவாமி, கணபதி, முருகன், பகவதி மற்ற உப தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நம்பூதிரிபாடு, கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். 'ட்ரோன்' மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
அப்போது பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சுவாமிக்கு கேரள முறைப்படி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஐயப்பா அறக்கட்டளை தலைவர் நடராஜன், சட்ட ஆலோசகர் அய்யப்பமணி, செயலர் சண்முகம், துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சரவண பெருமாள், இணை செயலர்கள் சிவக்குமார், சீனிவாசன், டிரஸ்டிகள் ராஜபிரியா, ரவிச்சந்திரன், ரவிசுப்பிரமணியம், ஆறுமுகசாமி, சின்னக்கவுண்டர், மீனாட்சி சுந்தரம், ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

