ADDED : டிச 26, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 26-
சேலம், பழைய சூரமங்கலம் மணிகண்ட ஆசிரமத்தில் ஐயப்ப மண்டல பூஜை, திருவிளக்கு பூஜை நாளை தொடங்க உள்ளது.
காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், சுதர்ஸன ஹோமம், 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம், 10:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை, 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கும். 28 காலை, 8:00 மணிக்கு, பக்தி இன்னிசை, 11:00 மணிக்கு அன்னதானம், இரவு, 8:00 மணிக்கு புஷ்ப அபிஷேகம், 29 காலை, 10:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், மாலை, 6:30 மணிக்கு
குழந்தைகள் தாலவிளக்கு ஏந்தி வரும் ஊர்வலம், ஜன., 1ல் புத்தாண்டு சிறப்பு தரிசனம், 14 மாலை, 6:30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடக்க
உள்ளது.

