/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறனில் பேக்டர் மருந்து சந்தைக்கு வர உள்ளது'
/
'2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறனில் பேக்டர் மருந்து சந்தைக்கு வர உள்ளது'
'2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறனில் பேக்டர் மருந்து சந்தைக்கு வர உள்ளது'
'2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறனில் பேக்டர் மருந்து சந்தைக்கு வர உள்ளது'
ADDED : செப் 22, 2024 05:07 AM
சேலம்: ''இனி, 2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறன் கொண்ட, பேக்டர் மருந்து சந்தைக்குளது,'' என, ரத்த வங்கி தலைவர் ரவீந்திரன் பேசினார்.
சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'ரத்தம் உறையாமை குறைபாடு' குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஹீமோபிலியா சொசைட்டி சார்பில் நேற்று நடந்தது.
அதில் மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: ரத்தம் உறையாமை குறைபாடுக்கு பயன்படுத்தப்படும், 'பேக்டர்' என்ற ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது. மருந்து இல்லாமல் ஐஸ்கட்டி ஒத்தனம் கொடுப்பது, பேண்டேஜ் போட்டு ஓய்வு எடுப்பதன் மூலம் பாதிப்பை சமாளித்து விடலாம்.
தற்போது ரத்தம் உறையாமைக்கு பயன்படுத்தப்படும் பேக்டர் மருந்து, 8 முதல், 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் திறன் கொண்டது. பின் மீண்டும் அந்த மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும். இனி, 2 வாரம் சமாளிக்கும்படி அதிக திறன்கொண்ட மருந்து சந்தைக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சொசைட்டி தலைவர் நடராஜ் பேசியதாவது:
பொதுவாக ஒருவருக்கு, 10 முதல், 15 நிமிடத்தில் ரத்தம் உறைந்துவிடும். குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையவே உறையாது.
அதனால் வெளி, உள்காயம் ஏற்பட்டால் குணப்படுத்த தனிகவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டு, தசைப்பகுதிகளில் ரத்தப்போக்கு அதிகமாகி வீக்கம் உண்டாகிவிடும். இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கு பொறுமை, நிதானம் மிக முக்கியம். முறையான சிகிச்சை இல்லை எனில் ஊனமடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சொசைட்டி செயலர் வெங்கடாசலம், பொது மருத்துவர் திருநாவுக்கரசு, ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பங்கேற்றனர்.
ரூ.10 லட்சம் கெமிக்கல் திருட்டு
தம்பதி உள்பட 4 பேர் கைது
சேலம்: சேலம், திருச்சி பிரதான சாலையை சேர்ந்தவர் சரண், 36. கெமிக்கல் நிறுவனத்தை நடத்துகிறார்.
அங்கு மேலாளராக பணிபுரிந்த, குகை, வசந்தம் நகரை சேர்ந்த காதர் ெஷரீப், 47, கடந்த, 2023 அக்., 19 முதல், இந்த மாதம், 1 வரை, 10.33 லட்சம் ரூபாய் மதிப்பில் கெமிக்கல்ஸ் பொருட்களை திருடியுள்ளார்.
தொடர்ந்து களரம்பட்டி பிரதான சாலை ஆட்டோ டிரைவர் வடிவேல், 57, உதவியுடன், தாதகாப்பட்டி குமரன் நகரில் சோப் தயாரித்து விற்கும் கங்காதரன், 51, நிறுவனத்துக்கு, திருடிய கெமிக்கலை விற்றுள்ளார். இது தெரியாமல் இருக்க, காதர் ெஷரீப், கெமிக்கல் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை அகற்றியுள்ளார்.
இந்நிலையில், கடந்த, 19ல் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், சரண் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் காதர் ெஷரீப்,
அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி ஹசினா பேகம், 35, மற்றும் கங்காதரன், வடிவேல் ஆகியோரை, கைது செய்தனர்.