/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா
/
பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 01, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி,: இடைப்பாடி அருகே குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி பாலசுப்-பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி பகு-தியில், பாலசுப்பிரமணியர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்-பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்-குடங்களை எடுத்து வந்தனர்.நேற்று பாலசுப்பிரமணியர் கோவில் கோபுர கலசங்கள் மீது, சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்-தனர்.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் திரண்ட பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, மகா அபிஷேக பூஜை நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.