ADDED : ஜூலை 30, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், த.வெ.க.,வின், நரசிங்கபுரம் நகர செயலர் வினோத்குமார் தலைமையில் கட்சியினர், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் ஜீவிதாவிடம் நேற்று அளித்த மனு:
நகராட்சி, 13வது வார்டு, காமராஜர் நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு கழிவுநீர், மழைநீர் வடிகால், தெரு விளக்கு வசதியில்லை. இரவில் விஷ ஜந்துக்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.