/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை
ADDED : டிச 13, 2024 09:06 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது.
கல்-வராயன்மலை பகுதியில் பெய்த கன மழையால், கடந்த, 2 முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதி-களவில் தண்ணீர் வந்தது. 9 நாளுக்கு பின், நேற்று முன்தினம்தான், நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை முதல், கல்வராயன் மலைப்ப-குதியில் தொடர் மழையால், நீர்வீழ்ச்சியில் சுற்-றுலா பயணியர் குளிக்க மீண்டும் தடை விதிக்-கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்-தனர்.