ADDED : ஜன 06, 2025 02:31 AM
ஓமலுார்: ஓமலுார், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து, பூசாரிப்பட்டியில், 'தொன்மை தமிழ் சங்கம்' தொடக்க விழாவை நேற்று நடத்தினர். தலைவர் ஜயப்பன் தலைமை வகித்தார். அதில் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்-தப்பட்டது. தொடர்ந்து தமிழார்வலர்கள் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி, போட்டி-களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து தலைவர் ஐயப்பன் கூறுகையில், ''ஆங்கிலேய ஆட்சி காலத்தில், 1772ல் இந்தியாவிலேயே முதன்முதலாக சேலம் ஜில்லா உருவானது. அதனால் தொன்மை தமிழ் சங்கம் என பெயரிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும், முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். அந்த காரணத்துக்காகவே இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது,'' என்றார். செயலர் விஜய-குமார், பொருளாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

