ADDED : மார் 07, 2024 02:16 AM
அ நிறம் | அளவு
சேலம், வரும், 11, 12ல், பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அறிக்கை: திருப்பத்துார் - பங்காருப்பேட்டை தடத்தில் சோமநாயக்கன்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியால் மார்ச், 11 மாலை, 4:50க்கு புறப்படும் எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ்; மார்ச், 12 இரவு, 7:00 மணிக்கு கிளம்பும் பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மார்ச், 12ல் புறப்படும் பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மாற்று வழித்தடமான ஓசூர், தர்மபுரி, சேலம் வழியே இயக்கப்படும். கிருஷ்ணராஜபுரம், வைட்பீல்டு, பங்காருப்பேட்டை, குப்பம், திருப்பத்துார் ஸ்டேஷன்களுக்கு செல்லாது.
