sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில்; சேலம் வழியே சோதனை ஓட்டம்

/

பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில்; சேலம் வழியே சோதனை ஓட்டம்

பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில்; சேலம் வழியே சோதனை ஓட்டம்

பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில்; சேலம் வழியே சோதனை ஓட்டம்


ADDED : ஜூன் 18, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : பெங்களூரு-மதுரை வந்தேபாரத் ரயில், சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.

பெங்களூருவிலிருந்து தென் மாநிலங்களுக்கு செல்வதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மதுரை செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக வந்தேபாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்து வந்தது.இந்நிலையில், பகல் நேர ரயிலாக பெங்களூரு - மதுரை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து காலை, 5:15 மணிக்கு கிளம்பி, 7:15 க்கு திருச்சி, 9:55க்கு சேலம், மதியம், 1:15 மணிக்கு பெங்களூரு செல்லவும், மறு மார்க்கத்தில், மதியம், 1:45 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பி, மாலை, 5:00 மணிக்கு சேலம், இரவு, 8:20க்கு திருச்சி, 10:25 மணிக்கு மதுரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது. சேலத்துக்கு காலை, 9:55 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரயில், 9:18 மணிக்கு வந்து சேர்ந்தது.ரயில்வே அலுவலர்கள், பணியாளர்கள், மலர் துாவி ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர். பலரும் செல்பி எடுத்து கொண்டனர். பின் ரயில் பெங்களூரு கிளம்பி சென்றது.






      Dinamalar
      Follow us