/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
/
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
ADDED : நவ 24, 2025 03:57 AM
சேலம்,:பகவான் சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழா, சேலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சேலம் பொன்னம்மாபேட்டை சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி சார்பில், பகவான் சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழா கடந்த நவ.15ல் துவங்கியது.விழாவையொட்டி, தினசரி சிறப்பு சுப்ரபாதம், நாம சங்கீர்த்தனம் மற்றும் 'ஓம்காரம்' பிரார்த்தனைகள் நடந்தன. 9 நாட்கள் நடந்த நுாற்றாண்டு விழாவில், சேலம் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லங்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லம், விழியிழந்தோர் பள்ளி, என பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நேற்று சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு தினத்தையொட்டி, காலை 7:00 மணிக்கு பிரசாந்தி கொடியை சமிதி ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் ஏற்றி வைத்தார்.
ஸ்ரீசத்யசாய் மெட்ரிக் பள்ளி மற்றும் பால விகாஸ் குழந்தைகளின் பாட்டு, நடனம், நாம சங்கீர்த்தனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மாலையில் நடந்த சிறப்பு சாய் பஜன் மற்றும் சொற்பொழிவு மங்கள ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பகவான் சத்ய சாய் பாபா இருந்த அறையை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை சேலம் சத்ய சாயி சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் ரகுராமன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்ய நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

