/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு
/
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 24, 2025 01:35 AM
சேலம்: இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சேலம், நான்கு ரோடு, சாமுண்டி காம்ப்ளக்ஸ் தரைதளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில், வரும் டிச., 3- முதல், 12 வரை, 10 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்கிறது.
அதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை; கொள்முதல் செய்யும் முறை; உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல்; கடன் தொகை வழங்கும் முறை; ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வித்தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறு-தியில் சான்றிதழ் வழங்கப்படும்.தேசிய கூட்டுறவு, தனியார் வங்கி, நகை அடகு கடைகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்தலாம். நகை வியாபார நிறுவ-னங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள், மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பயிற்சி கட்டணம், 7,000 ரூபாய். விபரங்க-ளுக்கு, 9443728438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்-ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

