/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்
/
கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்
ADDED : டிச 12, 2024 07:29 AM
தாரமங்கலம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று நடக்கிறது. இதில் காலையில் சுவாமிக்கு, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடக்கும். மாலை, 5:00 மணிக்கு, பூசாரிகள் தீச்சட்டியில் பரணி தீபம் ஏற்றுகின்றனர். இந்த தீபத்தை, பூசாரி கையில் ஏந்தி, கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவந்து, அங்கிருந்து வரதராஜ பெருமாள், ஆறடி விநாயகர், வேலாயுதசாமி,
இளமேஸ்-வரர், பத்ரகாளியம்மன், ஓடை விநாயகர், கோவில்களுக்கு எடுத்-துச்செல்வர். தொடர்ந்து தேர் செல்லும் வீதியில் சென்று, கோவிலில் நிறைவு செய்வர். தொடர்ந்து நாளை இரவு, 8.00 மணிக்கு, கோவில் முன்
சொக்கப்பனை(கூம்பு), 5 நிலை கொண்ட ராஜகோபுர உச்சியில் இருந்து கொடி சேலை எரி-யூட்டும் நிகழ்வு நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.