/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 தேர்வில் பாரதியார் பள்ளி சாதனை
/
பிளஸ் 2 தேர்வில் பாரதியார் பள்ளி சாதனை
ADDED : மே 11, 2025 03:07 AM
ஆத்துார், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஆத்துார் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷிகா, ஸ்ரீவர்ஷினி ஆகியோர், 600க்கு, 596 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். சஞ்சீவ், 594, செழியன், 591 மதிப்பெண்கள் பெற்று முறையே, 2, 3ம் இடங்களை பிடித்தனர்.
கணினி அறிவியலில், 19 பேர், கணினி பயன்பாட்டில், 5 பேர், கணிதத்தில், 4 பேர், வணிகவியல், வேதியியல் பாடத்தில் தலா, 3 பேர், உயிரியலில், 2 பேர், பொருளியல், இயற்பியல், கணக்குப்பதிவியலில் தலா ஒருவரும், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்ணுக்கு மேல், 5 பேர், 580க்கு மேல், 12 பேர், 550க்கு மேல், 50 பேர், 500க்கு மேல், 134 மாணவர்கள் பெற்று சாதித்துள்ளனர். இவர்களை, பள்ளி தலைவர் இளவரசு, செயலர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், பாலக்குமார், சந்திரசேகரன், முதல்வர்
நளாயினிதேவி பாராட்டினர்.

