/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசவ, படுக்கை அறைகள் கட்ட பூமி பூஜை விழா
/
பிரசவ, படுக்கை அறைகள் கட்ட பூமி பூஜை விழா
ADDED : செப் 06, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம் :தாரமங்கலம், சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை சிறு அளவில் இருந்ததால் மருத்துவர்கள் சிரமப்பட்டனர். அங்கு பிரசவ அறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தேசிய சுகாதார இயக்க, 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில், 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க., வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், அ.தி.மு.க.,வின், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் காங்கேயன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.