ADDED : ஆக 20, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி மணிவிழுந்தான் வடக்கு கிராமத்தில், அயோத்திதாசர் திட்டத்தில் சமுதாயக்கூடம் கட்ட, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா, நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் நடேசன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.