ADDED : ஏப் 27, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: 'நபார்டு' நிதி உதவி திட்டத்தில், ஆத்துார் அருகே மல்லியக்-கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 86 லட்சம் ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்-தது. ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். பி.டி.ஏ., தலைவர் ஜோதி, பொதுப்பணித்துறை உதவி செயற்-பொறியாளர் விஜயகுமார், ஆசிரியர்கள், மேலாண் குழுவினர் பங்-கேற்றனர்.

