/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிழற்கூடம், குடிநீர் தொட்டி பணிகளுக்கு பூமிபூஜை
/
நிழற்கூடம், குடிநீர் தொட்டி பணிகளுக்கு பூமிபூஜை
ADDED : மார் 15, 2024 03:53 AM
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் எதிரே, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கு பூமி பூஜை விழா, நேற்று நடந்தது.
அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து களரம்பட்டி, மாரியம்மன் கோவில் பகுதியில், 16 லட்சம் ரூபாயில் மேல்நிலை தொட்டி; ஏ.கரடிப்பட்டி, தமையனுார் பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர்கள் நிதியில், தலா, 5 லட்சம் ரூபாயில் தடுப்புச்சுவர் என, 66 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
மேலும் களரம்பட்டி, அண்ணா நகர், ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, தலா, 9.98 லட்சம் ரூபாயில் நிழற்கூடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ., தொகுதி
மேம்பாட்டு நிதியில் சார்வாய்புதுார், மணிவிழுந்தான் ஊராட்சிகளில் தலா, 16 லட்சம் ரூபாயில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டி; ஆரத்தி அகரத்தில், 14 லட்சம் ரூபாயில், 60,000 லிட்டர் மேல்நிலை தொட்டி; வரகூரில், 10 லட்சம் ரூபாயில் குடிநீர் குழாய் அமைத்தல் என, 56 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகளுக்கு, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமையில் பூமிபூஜை
நடந்தது.
தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்
பங்கேற்றனர்.

