/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா நடத்த பூமி பூஜை
/
இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா நடத்த பூமி பூஜை
ADDED : அக் 27, 2024 04:19 AM
மேட்டூர்: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., முதல்வராக இருந்த-போது, சேலம் மாவட்டத்தில், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் பல்வேறு திட்டங்களை செயல்-படுத்திய இ.பி.எஸ்.,க்கு, விவசாயிகள் சார்பில் அடுத்த மாதம் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் விழா நடத்துவதற்கு, மேச்சேரி அடுத்த காமனேரியில், இடம் தேர்வு செய்யப்பட்டுள்-ளது. அங்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
இதில் மாநில ஜெ., பேரவை துணை செயலர் கலையரசன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, மேச்சேரி பேரூர் செயலர் குமார், ஒன்றிய செயலர்கள் சந்திரசேகரன், செல்வம், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.