ADDED : ஜன 05, 2025 01:20 AM
சேலம்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மிதிவண்டி போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
அதில், 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ., 15 வயதுக்குட்பட்டோருக்கு, 20 கி.மீ., 17 வயதுக்குட்பட்டோருக்கு, 20 கி.மீ., என்றும், மாணவியருக்கு, 10 கி.மீ., 15 கி.மீ., என்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய், நான்கு முதல், 10 இடங்களை பிடித்தவர் களுக்கு தலா, 250 ரூபாய் பரிசு என, விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'நாளை முதல் கரும்பு வெட்டப்படும்'
இடைப்பாடி,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர் களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு வழங்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதிகளில் கரும்புகளை கொள்முதல் செய்ய, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வேளாண், கூட்டுறவு அதிகாரிகள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, பூலாம்பட்டி, கூடக்கல், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதி களில் உள்ள தோட்டங்களில் கரும்புகளை பார்வையிட்டனர். கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் நாளை முதல் வெட்டப்பட்டு, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.