/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுக்கு சைக்கிள் பேரணி
/
உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுக்கு சைக்கிள் பேரணி
ADDED : டிச 18, 2024 01:57 AM
உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுக்கு சைக்கிள் பேரணி
சேலம், டிச. 18-
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட சைக்கிள் ஓட்டும் சங்கம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பேரணி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க துணைத்தலைவர் ராஜாராம் தொடங்கி வைத்தார். தொங்கும் பூங்கா, காந்தி சாலை வழியே அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்ற பேரணி, மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர், உடல் ஆரோக்கியத்துக்கு சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆணையத்தின் சேலம் உதவி இயக்குனர் மஞ்சுளா, சங்க தலைவர் நாசர்கான் உள்பட பலர் பங்கேற்றனர்.