ADDED : ஜன 10, 2026 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியருக்கு, அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்து,
400 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள், நகராட்சி துணைத்தலைவி தனம் உள்-ளிட்ட தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

