/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாரச்சந்தையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் புலம்பல்
/
வாரச்சந்தையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் புலம்பல்
வாரச்சந்தையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் புலம்பல்
வாரச்சந்தையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் புலம்பல்
ADDED : நவ 03, 2024 12:49 AM
இடைப்பாடி, நவ. 3-
வாரச்சந்தையாக பஸ் ஸ்டாண்ட் மாறியதால் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வியாபாரமின்றி புலம்புகின்றனர்.
கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்து பஸ்களும் வந்து செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் கொங்கணாபுரத்தில் சனிதோறும் சந்தை, பஸ் ஸ்டாண்டில் கூடி வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் சில பஸ்களும் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் அதிகளவில் கடைகள் போடப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையாக மாறியுள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, பஸ் ஸ்டாண்ட் வளாக கடைகளை ஏலம் எடுத்தவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திலக்ராஜூ கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டுக்குள் சில டவுன் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் வருவதில்லை. அங்கு கடை போட்டுள்ளவர்கள், பஸ் ஸ்டாண்டில் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் தான். இருப்பினும் அடுத்த வாரம் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.