/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக், மொபட் திருட்டு; போலீசார் விசாரணை
/
பைக், மொபட் திருட்டு; போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 15, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம், இடைப்பாடி கலர்பட்டியை சேர்ந்தவர் தவசியப்பன், 54, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு தனது உறவினரை பஸ்ஸில் ஏற்றி விட, ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்குள்ள பூக்கடை அருகே தனது டி.வி.எஸ்.,ஸ்டார் சிட்டி பைக்கி நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பைக்கை காணவில்லை.
இதே போல் ஜலகண்டாபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 24. இவர் நேற்று முன் தினம் மதியம், ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி ரோட்டில் உள்ள கிளினிக்கிற்கு, தனது மொபட்டில் சென்றுள்ளார். மாத்திரை வாங்கி விட்டு திரும்பியபோது மொபட்டை காணவில்லை. ஜலகண்டாபுரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.