ADDED : நவ 20, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், வனவாசியை சேர்ந்தவர் ரவி, 37. இவர் கடந்த, 17ல், சேலம் அரசு மருத்துவமனையில், செவிலிய பயற்சி பள்ளி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளி ஜஸ்வின் ேஷக், தவறி விழுந்து காயம் அடைந்தார்.
அவரை, 'ஸ்டார் சிட்டி' பைக்கில் ஏற்றிய ரவி, மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க அழைத்துச்சென்றார். முன்னதாக, அவரது பைக்கை, வாகன நிறுத்த இடத்தில் நிறுத்தினார். மாலையில் திரும்பியபோது பைக்கை காணவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, மருத்துவமனை போலீசார் விசாரித்து, மல்லுார், பழவநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன், 37, என்பவரை நேற்று கைது செய்து பைக்கை மீட்டனர்.

