/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலீடு பெற்று நிதி நிறுவனம் மோசடி பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதம்
/
முதலீடு பெற்று நிதி நிறுவனம் மோசடி பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதம்
முதலீடு பெற்று நிதி நிறுவனம் மோசடி பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதம்
முதலீடு பெற்று நிதி நிறுவனம் மோசடி பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதம்
ADDED : நவ 20, 2025 01:58 AM
சேலம், தனியார் நிதி நிறுவனம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததை கண்டித்து, அதில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சேலம் நேரடி விற்பனையாளர் சங்கம் சார்பில், கோட்டை மைதானத்தில், கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அகில இந்திய துணை ஒருங்கிணைப்பாளர் அக்னிராமு தலைமை வகித்தார். அதில் தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த நிறுவனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து அக்னிராமு கூறியதாவது: மும்பையை தலைமையிடமாக கொண்ட, சேலம், ஸ்வர்ணபுரியில் இயங்கும், தனியார் நிதி நிறுவனத்தில், பணம் முதலீடு செய்தால் இரு மடங்காக கொடுக்கப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டது. அதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். பல கோடி ரூபாய் வசூலித்த நிலையில், யாருக்கும் பணத்தை திருப்பித்தரவில்லை.
இதுகுறித்து நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதியவில்லை. உடனே வழக்குப்பதிந்து விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி செய்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

