/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டப்பகலில் முகமூடி அணிந்து பைக் திருட்டு
/
பட்டப்பகலில் முகமூடி அணிந்து பைக் திருட்டு
ADDED : ஆக 02, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்,நரசிங்கபுரம் நகராட்சி, 2வது வார்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி கந்தவேல், 45. இவர் கடந்த ஜூலை, 30 காலை, வீடு முன், 'பேஷன் ப்ரோ' பைக்கை நிறுத்தியுள்ளார். மதியம், 1:00 மணிக்கு திரும்பி பார்த்தபோது பைக்கை காணவில்லை. நேற்று அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த இருவர், பைக்கை எடுத்துச்சென்றது பதிவாகியிருந்தது.
இதுகுறித்து கந்தவேல் நேற்று, ஆத்துார் டவுன் போலீசில் புகார் செய்தார். மேலும் திருடிய வீடியோ காட்சி பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.