ADDED : அக் 03, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : ஓமலுார் அருகே பெரமெச்சூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல், 37. இவர் நேற்று ஹீரோ ஹோண்டா பைக்கை, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள மார்க்கெட் முன் நிறுத்திவிட்டு, காய்கறி வாங்கச்சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் புகார்படி ஓமலுார் போலீசார் விசாரித்து, காடையாம்பட்டி, சின்னதிருப்பதியை சேர்ந்த சபரிநாதன், 23, என்பவரை கைது செய்தனர்.