/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுரையில் பீமா ஜூவல்லரி 120வது நிறுவனர் விழா
/
மதுரையில் பீமா ஜூவல்லரி 120வது நிறுவனர் விழா
ADDED : ஜூலை 29, 2025 01:16 AM
மதுரை, மதுரையில், பீமா ஜூவல்லரியில், 120வது நிறுவனர் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கவுரவிக்கப்பட்டனர். 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர்களில், தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகையும், அடுத்தடுத்து மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு கூப்பன்களையும், பீமா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர்களான சுதிர் கபூர், தீபா கபூர் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் முனைவர் பாலசுப்பிர
மணியன், முனைவர் அருணா ஆகியோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். விழாவிற்கு வருகை தந்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பீமா ஜூவல்லரி மேலாளர்களான சென்ராயன், மாணிக்கம், கார்மேகம், கார்த்திக், வெங்கடேசன், தாமஸ், பிரகாஷ் மற்றும் ஊழியர்கள்
செய்திருந்தனர்.