/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு தகவல் மையம்
/
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு தகவல் மையம்
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு தகவல் மையம்
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு தகவல் மையம்
ADDED : அக் 26, 2025 01:15 AM
சேலம், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவுக்கு, சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை: மாநகராட்சி எல்லைக்குள் நிகழ்ந்த பிறப்பு, இறப்புகளுக்கான பதிவு சான்றிதழ் பெறுவது, பிறப்பு, இறப்பு பதிவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, சேலம் மாநகராட்சி மைய அலுவலக தரைத்தளத்தில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய, உதவிக்கு அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வலைதளத்தில் உள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ்களும் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து தரப்படுகிறது. அதனால் பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான சந்தேகங்கள், விபரங்களை தெரிந்துகொள்ள, இச்சிறப்பு மையத்தை, மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.