/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் அனுமதி மறுப்பு: பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு
/
போலீஸ் அனுமதி மறுப்பு: பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு
UPDATED : ஏப் 11, 2025 07:20 AM
ADDED : ஏப் 11, 2025 12:29 AM

சேலம்,:சேலம் ஓமலூரில் வரும் 19ல் நடக்கவிருந்த தமிழக பா.ஜ., பெருங்கோட்ட மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழக பா.ஜ., சேலம் பெருங்கோட்டம் சார்பில், 'தேசம் காப்போம்; தமிழக வெல்வோம்' மாநாடு, வரும், 19ல் ஓமலுாரில் நடக்கவிருந்தது. போலீஸ் துறை அனுமதி மறுத்துள்ளதால், அதன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீதிமன்றத்துக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீதிமன்ற அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், மாநில தலைமைக்கான தேர்தல், தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் மாவட்ட தலைவர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால், சேலம் பெருங்கோட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் இறுதியில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநாடு தொடர்புடைய குழுவினர், அப்பணியை தொடர வேண்டும். மாநில தேர்தலுக்கு பின், தேசிய தலைவர்கள், மாநில தலைவர்களின் தேதி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

