/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.க., பெண் பிரமுகர் மீது பா.ஜ.,வினர் புகார்
/
தி.க., பெண் பிரமுகர் மீது பா.ஜ.,வினர் புகார்
ADDED : ஏப் 25, 2025 01:38 AM
சேலம்:
பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதிஸ்ரீ உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகள் நேற்று, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:
தி.க.,வை சேர்ந்த சுந்தரவல்லி என்பவர், 'எக்ஸ்' தளத்தில் கடந்த, 22ல் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு ராணுவ உடையில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து, பா.ஜ., செய்துள்ளது' என தெரிவித்துள்ளார். இவரது பதிவு மத்தியில் ஆளும் பா.ஜ., அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும், பிரிவினைவாத அரசியல் செயலாகவும் உள்ளது. இவர் மீதும், இவர் பின்புலமாக செயல்படும் நபர்கள் குறித்தும் விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

