/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது'
/
'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது'
'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது'
'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது'
ADDED : செப் 13, 2024 07:11 AM
ஆத்துார்: தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி பாரதி நகரில், பா.ஜ., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், புது உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் மாநில துணைத்தலைவர் துரைசாமி பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வந்தன. பா.ஜ.,வுக்கு, 12 சதவீத ஓட்டுகள் இருந்த நிலையில், தலைவர் அண்ணாமலை நடைபயணம் மூலம் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. இதனால் லோக்சபா தேர்தலில், 18 சதவீதம் என, ஓட்டுகள் அதிகரித்துள்ளன.
திராவிட கட்சிகளின் கூட்டணியின்றி, பா.ஜ., தலைமையேற்று தேர்தலில் போட்டியிட்டு அதிகளவில் ஓட்டுகளை பெற்றுள்ளன. 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு முக்கிய இடம் இருக்கும். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., வளர்ச்சி பெற்று வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.