/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய கொடி ஏந்தி பா.ஜ.,வினர் பைக் பேரணி
/
தேசிய கொடி ஏந்தி பா.ஜ.,வினர் பைக் பேரணி
ADDED : ஆக 16, 2025 01:58 AM
வாழப்பாடி, சுதந்திர தினத்தை ஒட்டி, பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகே, நேற்று காலை, 10:00 மணிக்கு பைக் பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். அத்தனுார்பட்டி, பேளூர் பிரிவு சாலை, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் வழியே, 15 கி.மீ., சென்ற பேரணி, வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. மாவட்ட பொதுச்செயலர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராமச்சந்திரன், இளைஞரணி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் பா.ஜ.,வினர், ஓமலுாரில், பைக் பேரணியில் ஈடுபட்டனர். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தொடங்கிவைத்தார். பல்பாக்கி பிரிவு சாலையில் இருந்து, 100 பைக்குகளில், 200 பேர், தேசிய கொடியை கட்டிக்கொண்டு, தாரமங்கலம் வரை சென்றனர்.

