ADDED : ஆக 14, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில் உள்ள உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், துாய்மை இந்தியா திட்டத்தில், பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் துாய்மை பணி நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முகநாதன், இளைஞரணி மாவட்ட தலைவர் குணசேகரன், தெற்கு ஒன்றிய தலைவர் நெப்போலியன் உள்ளிட்ட நிர்வாகிகள், குப்பை, புற்கள், புதர்களை அகற்றினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின் பொன்னாரம்பட்டி, குமாரபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில், துாய்மைப்பணி மேற்கொண்டனர்.