/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காஷ்மீரில் இறந்த சுற்றுலா பயணியருக்கு சேலம் மாவட்டம் முழுதும் பா.ஜ., அஞ்சலி
/
காஷ்மீரில் இறந்த சுற்றுலா பயணியருக்கு சேலம் மாவட்டம் முழுதும் பா.ஜ., அஞ்சலி
காஷ்மீரில் இறந்த சுற்றுலா பயணியருக்கு சேலம் மாவட்டம் முழுதும் பா.ஜ., அஞ்சலி
காஷ்மீரில் இறந்த சுற்றுலா பயணியருக்கு சேலம் மாவட்டம் முழுதும் பா.ஜ., அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 01:31 AM
சேலம்:
ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட, 26 சுற்றுலா பயணியருக்கு, சேலம் மாவட்டம் முழுதும், பா.ஜ., சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்படி சேலம், சீலநாயக்கன்பட்டி மண்டலம், தாதகாப்பட்டியில், மண்டல தலைவர் காளிமுத்து தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நகர தலைவர் ராஜா, மேற்கு ஒன்றிய தலைவர் முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஓமலுாரில் ஒன்றிய தலைவர் சேதுபதி தலைமையிலும், அயோத்தியாப்பட்டணத்தில், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையிலும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இடைப்பாடி நகரம் சார்பில் இடைப்பாடி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரவிக்குமார் தலைமையில், பா.ஜ.,வினர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நகர தலைவர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில், பா.ஜ.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
கண்டன கோஷம்
தாரமங்கலம் நகர இந்து முன்னணி சார்பில் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள், சுற்றுலா பயணியரை கொன்ற பயங்கரவாதிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்தனர். மாவட்ட செயலர்கள் மணிகண்டன், கோபி, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள் மணி, சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம்
சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், பா.ஜ.,வினர், ஆத்துார், காந்தி சிலை பகுதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தினர். புதுப்பேட்டையில், மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், மாநில நிர்வாகி ரஹ்மான் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.