/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவி கூட்டு பலாத்காரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
மாணவி கூட்டு பலாத்காரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2025 12:52 AM
சேலம் கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், பா.ஜ., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவி மதிவதனகிரி தலைமை வகித்தார். அதில், 'ஆளும் தி.மு.க., அரசு அனைத்து வகையிலும் செயலிழந்துவிட்டது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது' என, தி.மு.க.,வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர மகளிரணி தலைவி கோகிலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.சிறப்பு சட்டம் தேவை
அதேபோல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர், கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்க மாவட்ட துணை தலைவி செல்வி தலைமை வகித்தார். அதில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண்கள், பெண் குழந்தைகளை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தினர். மாதர் சங்க மாவட்ட செயலர் தேவி, வாலிபர் சங்க சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

