/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., மாநில தலைவர் 19ல் ஓமலுார் வருகை
/
பா.ஜ., மாநில தலைவர் 19ல் ஓமலுார் வருகை
ADDED : ஏப் 15, 2025 06:26 AM
ஓமலுார்: சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகளை, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஓமலுாரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சேலம் பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ஜ., மாநில தலைவராக தலைமை ஏற்றுள்ள, நயினார் நாகேந்திரன் வரும், 19 காலை, 10:00 மணிக்கு ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, கந்தசாமி கவுண்டர் மண்டபத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் வரவேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் வரவேற்பு உரையுடன், மாவட்ட தலை-வர்கள் சேலம் கிழக்கு சண்முகநாதன், கரூர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு ராஜேஷ் குமார், நாமக்கல் கிழக்கு சரவணன், சேலம் மாநகர் சசிகுமார், தர்மபுரி சரவணன், கிருஷ்ணகிரி மேற்கு நாராயணன், கிருஷ்ணகிரி கிழக்கு கவியரசு ஆகியோர் முன்னி-லையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னாள் மாவட்ட தலைவர் சுதீர்முருகன் நன்றி கூறுகிறார். பெருங்கோட்டத்தை சேர்ந்த முன்னாள், இந்நாள் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்-ளது.