sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ., வலியுறுத்தல்

/

தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ., வலியுறுத்தல்

தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ., வலியுறுத்தல்

தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : பிப் 18, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''தமிழகத்தில், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை விவகாரத்தில், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில பொது செயலர் ராமஸ்ரீனிவாசன் நேற்று கூறினார்.

சேலத்தில் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் பட்ஜெட்டில், ஏழைகள், பெண்கள், பட்டியல் சமுதாயத்தினர், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்-ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்-காக உள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனந்த விகடனில் வெளிவந்த கார்ட்டூனால் நாடே கொதித்து போயுள்ளது. தமிழக பா.ஜ., சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. ஆனால், காங்., ஆட்சி செய்யும் கர்நாடகா, கம்யூ., ஆட்சி செய்யும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்-கொள்ள மாட்டோம் என்கின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கை என்பது, மொழிக்கொள்கை மட்டுமல்ல. ஆசிரியர் பயிற்சி, மாணவர்கள் திறன் வளர்ப்பு உள்ளிட்ட பல மாற்றங்கள் உள்ளன. அதை செயல்படுத்தத்தான் மத்திய அரசு நிதி வழங்கு-கின்றனர். தேசிய கல்வி கொள்கை தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. ஆங்கிலம் இரண்டாவது மொழி. மூன்றாவது மொழி, மாணவனின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யலாம். அது ஹிந்தி-யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது என்பதை விட, சட்டப்படி கொடுக்க இய-லாது. இதற்கு மேல் நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

தமிழகத்துக்கு மட்டுமின்றி கேரளா, குஜராத், ஹரியானா, மகா-ராஷ்டிரா போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் இல்லை. தமிழக பட்ஜெட்டில் சேலம், நாமக்கல் என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தி.மு.க.,வினர் என்ன சிறப்பு திட்டம் அறிவிக்கின்றனர் என கூறட்டும். தமிழகத்தில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுமிகள் மீது அதிகமாகி-யுள்ளது.

பள்ளி வளாகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. என்ன நடக்கிறது? அதை எப்படி தடுக்கப்போகின்றனர் என்பது குறித்து தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார். அவருடன் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உடனிருந்தனர்.

'தி.மு.க., 20 தொகுதிகளில் கூட ஜெயிக்காது'

சேலத்தில் மாநகர், பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்-கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார்.

பா.ஜ., மாநில பொதுச்செயலரும், பேராசிரியருமான ராமஸ்ரீனிவாசன் பேசியதாவது: தி.மு.க.,வில் ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதி துணை முதல்வராக இருக்கிறார். திருச்சி என்றால் நேரு அன்ட் சன்ஸ், விழுப்புரம் சென்றால் பொன்முடி அன்ட் சன்ஸ், வேலுார் சென்றால் துரைமுருகன் அன்ட் சன்ஸ், துாத்துக்குடி சென்றால் பெரியசாமி அன்ட் சன்ஸ் என்ற நிலைதான் உள்ளது.

இன்னும் சில நாட்களில், தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய போகிறது. அப்போது, சேலம் மாவட்டத்துக்கு என்ன செய்தது, மதுரைக்கு என்ன செய்தது என கேட்டால் பதில் சொல்ல முடி-யுமா? இனி, 12 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் தான் வரி செலுத்த வேண்டும் என, பட்ஜெட்டில் சொல்லப்பட்-டுள்ளது. இது, தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா? அதனால், இது எல்லோருக்குமான பட்ஜெட்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 20 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தி.மு.க.,வினர், பழைய தி.மு.க.,வை என்-னவென்று காட்டுவோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் புதிய பா.ஜ.,வை காட்டுகிறோம். மிசாவை பார்த்த நீங்கள், அமித்-ஷாவை பார்க்கவில்லை என்று சொல்கிறோம். வரும் தேர்தலில், தி.மு.க.,வை அகற்றிவிட்டுதான் போவோம். அதுதான் பா.ஜ.,வின் வேலை. சேலத்தில் தாமரையை மலர வைப்போம். அதற்கு, இப்போதே பா.ஜ.க.,வினர் வேலை செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us