/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கண் சிமிட்டும் மின்விளக்குவாகன ஓட்டிகள் திக்... திக்
/
கண் சிமிட்டும் மின்விளக்குவாகன ஓட்டிகள் திக்... திக்
கண் சிமிட்டும் மின்விளக்குவாகன ஓட்டிகள் திக்... திக்
கண் சிமிட்டும் மின்விளக்குவாகன ஓட்டிகள் திக்... திக்
ADDED : ஏப் 23, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில் ஏரி சாலை பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கிருந்து பிரியும் அடிக்கரை சாலையில், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அடிக்கரை திரும்பும் சாலையில் இரு கம்பங்களில் உள்ள விளக்குகள், ஒரு மாதமாக எரியவில்லை. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மற்றொரு கம்பத்தில், மின் விளக்கு கண் சிமிட்டியபடி உள்ளது.
இதனால் இரவில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், திக்... திக்... அச்சத்தில் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், விளக்குகளை எரிய வைக்க, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.