/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குட்டையில் தடுப்பு அமைத்து அணைக்கட்டில் அகற்றம் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர்வரத்து
/
குட்டையில் தடுப்பு அமைத்து அணைக்கட்டில் அகற்றம் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர்வரத்து
குட்டையில் தடுப்பு அமைத்து அணைக்கட்டில் அகற்றம் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர்வரத்து
குட்டையில் தடுப்பு அமைத்து அணைக்கட்டில் அகற்றம் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர்வரத்து
ADDED : அக் 14, 2024 04:59 AM
ஓமலுார்: பண்ணப்பட்டி குட்டையில் தடுப்பு அமைத்து அணைக்கட்டில் ஏற்படுத்திய தடுப்பை அகற்றியதால் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர் வருகிறது.
காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி குட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட கரையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஊராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள், அங்கு வரும் தண்ணீரை, பண்ணப்பட்டி பிரிவு மற்றும் ராகவாம்பாள் அணைக்கட்டு பகுதி-களில் தடுப்பு ஏற்படுத்தி நிறுத்தினர். இதனால் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் தேங்கி அருவிபோல் கொட்டி வடமனேரி நோக்கி சென்றது. அந்த அருவியில் மக்கள் நேற்று குளித்து மகிழ்ந்தனர்.ஆனால் பண்ணப்பட்டி பிரிவில் குட்டைக்கு செல்லக்கூடிய ஒரு பாதை, தும்பிப்பாடியில் உள்ள சந்தைப்பேட்டை ஏரிக்கு செல்-லக்கூடிய மற்றொரு பாதை உள்ளது. தற்போது ராகவாம்பாள் அணைக்கட்டு பகுதியில் நீர்வரத்து அடைப்பால் சந்தைப்-பேட்டை ஏரிக்கு வரக்கூடிய பாதையில் தண்ணீர் திறக்கக்கோரி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திரண்டனர். அங்கு சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள், தீவட்டிப்பட்டி போலீசார், குட்-டைக்கு செல்லும் வழியில் மணல் மூட்டைகளை அடுக்கி, தடுப்பு ஏற்படுத்திய பின் சந்தைப்பேட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்-கப்படும் என தெரிவித்தனர். பின் தும்பிப்பாடி மக்கள் கலைந்-தனர்.நேற்று காலை, குட்டைக்கு செல்லக்கூடிய பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. அவற்றை நீர்வள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசாந்த் பார்வையிட்டனர். பின் தும்பிப்பாடி மக்கள், ராகவாம்பாள் அணைக்கட்டு பகுதிக்கு சென்று அங்கிருந்த தடுப்பை அவர்களாகவே அகற்றினர். பின் தண்ணீர் பெருக்கெடுத்து பண்ணப்பட்டி பிரிவுக்கு வந்து சந்தைப்-பேட்டை ஏரியை நோக்கி சென்றது.