/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை
/
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை
ADDED : நவ 14, 2025 01:48 AM
சேலம், டில்லி, செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, சேலத்தில் கடந்த, 3 நாட்களாக, ரயில்வே ஸ்டேஷன், புது பஸ் ஸ்டாண்ட், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர போலீஸ் வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., சிவமூர்த்தி தலைமையில், மோப்ப நாய், 'ரூபி' உதவியுடன் போலீசார் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடங்கள், நினைவு சின்னங்கள் உள்ள பகுதி, கேன்டீன், அலுவலக வளாகம் முழுதும் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகப்படும் படியான பொருட்களை யாரும் பார்த்தால், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.