/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பு யாகங்களுடன் திருப்பவித்ர உற்சவம்
/
சிறப்பு யாகங்களுடன் திருப்பவித்ர உற்சவம்
ADDED : நவ 14, 2025 01:49 AM
சேலம், சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், 61ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம், அங்குரார்பணத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மகா சுதர்சனம் உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து அதில் வைத்து பூஜித்த கலசங்களில் இருந்த புனிதநீரால், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், வெள்ளி உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.ஃஃ
யாகத்தில் வைக்கப்பட்டிருந்த பல வண்ண பவித்ர மாலைகள், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், சிங்கமுக ஆஞ்சநேயர், ஆண்டாள் நாச்சியார், பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலன், விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் சார்த்தப்பட்டு மகா தீபாராதனையுடன் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை, 7:30 மணிக்கு மேல் மதியம், 2:00 மணிக்குள் அனைத்து வித யாகங்கள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடையும்.

